காட்டுமிராண்டி வைக்கிங்குகள்
வைக்கிங்ஸ் (Vikings) இந்த பெயரைக் கேட்டாலே இன்றளவும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் மக்கள் அரண்டு போவார்கள். காரணம், வைக்கிங்குகளின் காட்டுமிராண்டித்தனமான அராஜகங்கள் அத்தகையது. கி.பி. 800களிலிருந்து, 11ம் நூற்றாண்டு, ஒரு கூட்டம் வடஜெர்மனியின்
ஸ்காண்டிநேவியாவிலிருந்து செல்வங்களை தேடி புறப்பட்டனர். இவர்கள்தான் வரலாற்றில் ‘வைக்கிங்குகள்’ அல்லது நார்டிமென்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ‘வைக்கிங்குகள்’ என்றால் கடற்கொள்ளையர்கள் என்று பொருள். இவர்கள் மூன்று நூற்றாண்டுகள், ஐரோப்பாவின் பிரிட்டன், ஸ்காட்லாந்து மற்றும் பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி
செல்வங்களை கொள்ளையடித்தனர்.வைக்கிங்குகளின் இந்த தாக்குதல் இரண்டு காரணங்களால் உந்தப்பட்டன.
முதலாவது, வட ஐரோப்பாவில் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், 9 நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது. அங்கு சென்று தாக்குதல் நடத்திய சில வைக்கிங்குகள் செல்வ செழிப்புடன் இருப்பதைக் கண்டு, தாங்களும் இதுபோன்று ஆக வேண்டும் என்று மற்ற வைக்கிங்குகளுக்கும் ஆசை
ஏற்பட்டது. இரண்டாவது, அவர்களின் கப்பல் கட்டும் தொழில்நுட்பம்.
வைக்கிங்குகள் நீண்ட படகுகளை வைத்திருந்ததால், ஆறுகள் சூழ்ந்த பிரிட்டிஷ் தீவுகளுக்குள்ளும் புகுந்து கடுமையான தாக்குதல்கள் நடத்த முடிந்தது. தாக்குதல் என்றால், கண்ணில் பட்டவர்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டார்கள். வைக்கிங்குகள் கிறிஸ்தவர்கள் கிடையாது. இதனால், கிறிஸ்தவ மத
நிறுவனங்களுக்கு மதிப்பளிக்காமல் அதை எரித்து சாம்பலாக்கினர். கொள்ளை என்றால் அப்படியொரு கொள்ளை. பலரும் அடிமைகளாக பிடித்து செல்லப்பட்டு
கொடுமைப்படுத்தப்பட்டனர். வெகு விரைவில் ஸ்காட்லாந்தின் அனைத்து தீவுகளையும் கைப்பற்றினார்கள். பின் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் முக்கிய தரைப்பகுதிகளையும் கைப்பற்ற ஆரம்பித்தார்கள். இவர்களின் கண்மூடித்தனமான தாக்குதல் உத்தி எதிரிகளைப் பயமுறுத்தி நிலைகுலையச் செய்தது.
பல தசாப்தங்களாக திடீரென்று ஊருக்குள் புகுந்து தாக்கி கொள்ளையடிப்பதையே வழக்கமாக கொண்டிருந்தனர். ஐரோப்பிய மன்னர்களிடையேயான உட்பூசல்களை
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளை அதுவரை கண்டதில்லை என்ற அளவுக்கு ஐரோப்பியர்கள்
மிரண்டு போயிருந்தனர். ஒரு கட்டத்தில், கொள்ளையிடுவதை தாண்டி ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் குடியிருப்புகளை அமைத்து வைக்கிங்குகள் வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். ஐரோப்பாதாண்டி ரஷ்யா, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து உளளிட்ட
பகுதிகளிலும் தங்கள் குடியிருப்புகளை நிறுவினர். தொடர்ச்சியாக பல அராஜகங்களை நிகழ்த்தி ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினர். 1066 வரை இவர்களின் ஆட்சி நீடித்தது. இங்கிலாந்து மன்னர் ஹரோல்டு காட்வின்சன் வைக்கிங்குகளை தோற்கடித்து அவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்

Comments
Post a Comment