தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்
எல்லாப் பண்டைய நாகரிகங்களுக்கும் பெருமைகள் பல உண்டு. இதில் தனித்துவம் மிக்க பண்டைய நாகரிகங்களில் ஒன்று, கிரேக்க நாகரிகம். இன்றைய ஐரோப்பிய கலாசாரத்துக்கு அடிப்படையாக, கிரேக்க நாகரிகமே கருதப்படுகிறது. ஆசியா மைனர் தீபகற்பத்தின் மேற்கே அமைந்திருந்த பண்டைய கிரேக்க நாட்டிற்கு, ஹெல்லாஸ் அல்லது எல்லாடா என்று பெயர். இதை கிரேக்க நாடு என்று குறிப்பிட்டாலும், நூற்றுக்கணக்கான தனித்தனி நாடுகளின் தொகுப்பாகவே இருந்தது. 2,823 ஆண்டுகள் கொண்ட கிரேக்க நாகரிகத்தை, மூன்று முக்கிய காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.
ஆர்காய்க் காலம் - (கி.மு. 800- – கி.மு. 508) ஆசியா மைனர் பகுதியின் மேற்கில், கிரேக்கக் காலனிகள் உருவாயின. மக்கள்தொகை அதிகரிக்கவே, அருகில் உள்ள நிலப்பரப்புகளுக்கு இடம்பெயர்ந்து, நகரங்களை உருவாக்கி வாழத் தொடங்கினர். வெவ்வேறு பகுதிகளிலும் கலாசாரங்கள் செறிவுற்று, பல்வேறு நகரம் சார்ந்த அரசியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டன.
ஹோமரின் இதிகாச இலக்கியங்கள் படைக்கப்பட்டது எல்லாம் ஆர்காய்க் காலத்தில்தான். கி.மு. 490 – 480க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பாரசீக மன்னரான ஜெர்ஜெஸ் (இப்போதைய இரான்) கிரீஸ் மீது படையெடுத்தார். இந்தப் போரில், கிரேக்கர்கள் ஜெயித்தனர். இதற்கு முக்கிய காரணம், டெலியன் கூட்டமைப்பு ஒப்பந்தம் ஆகும். அதாவது, கிரேக்கத்தில் அமைந்திருந்த 160 சின்னஞ்சிறு அரசுகள் (City- States) ஒருங்கிணைந்தன.
பாரசீக சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்பதுதான், அந்த இணைப்பின் ஒரே லட்சியமாக இருந்தது. ஆனால், இந்த ஒற்றுமை நீடிக்கவில்லை. மீண்டும் பழையபடி ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தேப்ஸ் ஆகிய கிரேக்க நகரங்களுக்குள், உள்நாட்டுப் போர்கள் ஏற்பட்டன. கிரேக்கம் தளர்ச்சியடையத் தொடங்கியது.
செவ்வியல் காலம் - கி.மு. 323 வரை.- இதுதான் அறிவியல் முன்னேற்றங்கள் நிகழ்ந்த காலம். தத்துவஞானிகள், ‘சாக்ரடீஸ், பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டி’ இலக்கியவாதிகள் (ஹெசியோட்), கணிதவியலாளர்கள் (பிதாகரஸ் மற்றும் யூக்ளிட்), வரலாற்றாசிரியர்கள் (ஹெரோடொட்டஸ்), நாடகாசிரியர் (அரிஸ்டோபேன்ஸ்) போன்ற ஏராளமானவர்களை வாரி வழங்கிய பெருமை, இக்காலகட்டத்துக்கு உண்டு. ஏதென்சில், ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா நகரங்களுக்கு இடையே, நீண்டகாலமாக நடைபெற்ற போர்களும், பின்னர் மன்னர் அலெக்சாண்டர் பேரரசராக உருவானதும், இந்த காலகட்டத்தில்தான்.
ஹெலனியர்கள் காலம் கி.மு. 146 வரை.- அலெக்சாண்டர் மன்னர் இறப்பு தொடங்கி, ரோமானியர்கள் கிரேக்கம் மீது படையெடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் வரையிலான காலத்தை, ஹெலனியர்கள் காலம் என்கின்றனர். கிரேக்கர்கள், ஹெல்லன்கள் என்று அழைக்கப்பட்டதால். இக்காலகட்டத்திற்கு ஹெலனியர்கள் காலம் என்று பெயர்.
நாகரிகத் துளிகள்
நிலப்பரப்பு
கிரேக்கம் என்பது, தனிநாடு அல்ல. கிரேக்க நாடு ஏராளமான நகர சாம்ராஜ்யங்களை (City States) கொண்டதாக இருந்தது. சிறிய குன்றுகள், அவற்றின் மீது கோட்டைகள். கோட்டையைச் சுற்றி மதில் சுவர், குன்றின் அடிவாரத்தில் நகரங்கள், கிராமங்கள் – இதுதான் நகர ராஜ்ஜியம். ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, கோரிந்த், மாஸிடோன், தீப்ஸ் என, நூற்றுக்கும் மேற்பட்ட ராஜ்ஜியங்கள் இருந்தன. இவற்றுள் ஏதென்ஸ், ஸ்பார்ட்டா முக்கியமானவை.
கிரேக்கம் முழுக்க, மலைகள் நிறைந்த பகுதி. ஏராளமான மலைகளும் ஒரு சில எரிமலைகளும் இருந்தன. இது, மத்தியதரைக் கடல் அருகில் இருந்ததால், எல்லா ஊர்களும் கடற்கரையிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்துக்குள் அமைந்திருந்தன.
மொழி
கிரேக்கம் பல நாடுகள் ஒன்றாகச் சேர்ந்த கூட்டமைப்பு என்பதால், பகுதிக்குப் பகுதி, வாழ்க்கை முறையிலும், பழக்க வழக்கங்களிலும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன, ஆனால், நாட்டை இணைக்கும் பொதுவான அம்சமாக கிரேக்க மொழி இருந்தது.
தொழில்கள்
குடும்ப நிர்வாகம், குழந்தை வளர்ப்பு ஆகியவையே பெண்களின் பணி. வியாபாரம் செய்யவோ, கல்வி கற்கவோ அவர்களால் முடியாது. ஆண்களில் பெரும்பாலானோர் ராணுவத்தில் பணி புரிந்தார்கள். மீன் பிடித்தல், இரும்புப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவை பிற முக்கிய தொழில்கள். மழைக் காலத்தில் பெரு வெள்ளமும், பின்னர் ஆறு மாதங்கள் தொடர்ந்து வெயிலும் கொளுத்தும். தீவிரமான இரண்டு பருவநிலை விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்பதால், ஆலிவ் மரங்களை மட்டுமே இங்கு வளர்த்தார்கள். ஆலிவ் எண்ணெய் முக்கிய தயாரிப்புப் பொருளாக இருந்தது. உணவு தானியங்களில் பார்லியும், கோதுமையும் பயிரிடப்பட்டன.
பெரும்பாலான வீடுகளில், ஆடு வளர்த்தார்கள். இவற்றிலிருந்து பால், மாமிசம், கம்பளி உடைகளுக்கான ரோமம் ஆகியவற்றைப் பெற்றார்கள். பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே குதிரைகள் இருந்தன. இவை வாழ்க்கையின் வசதிக்கு அடையாளம்.
அகோராக்கள்
நகரங்களின் மையப்பகுதியில் சந்தைகள் இருந்தன. இவற்றுக்கு அகோரா (Agora) என்று பெயர். பல்வேறு நகர அகோராக்களில், உள்ளூர் சாமான்கள்தாம் கிடைக்கும்.
ஆனால், ஏதென்ஸ் நகர அகோராக்களில், எகிப்திய லினன், ஆப்பிரிக்க யானைத் தந்தம், சிரியாவின் வாசனைத் திரவியங்கள், ஆப்கனிஸ்தான் பேரீச்சை ஆகியவை விற்பனையாயின. கிரேக்க நாகரிகத்தில் அடிமை முறை இருந்ததால், சந்தைகளில் அடிமைகள் வியாபாரமும் நடைபெற்றது.
– மு.கோபி

Comments
Post a Comment