தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்
எல்லாப் பண்டைய நாகரிகங்களுக்கும் பெருமைகள் பல உண்டு. இதில் தனித்துவம் மிக்க பண்டைய நாகரிகங்களில் ஒன்று, கிரேக்க நாகரிகம். இன்றைய ஐரோப்பிய கலாசாரத்துக்கு அடிப்படையாக, கிரேக்க நாகரிகமே கருதப்படுகிறது. ஆசியா மைனர் தீபகற்பத்தின் மேற்கே அமைந்திருந்த பண்டைய கிரேக்க நாட்டிற்கு, ஹெல்லாஸ் அல்லது எல்லாடா என்று பெயர். இதை கிரேக்க நாடு என்று குறிப்பிட்டாலும், நூற்றுக்கணக்கான தனித்தனி நாடுகளின் தொகுப்பாகவே இருந்தது. 2,823 ஆண்டுகள் கொண்ட கிரேக்க நாகரிகத்தை, மூன்று முக்கிய காலகட்டங்களாகப் பிரிக்கலாம். ஆர்காய்க் காலம் - (கி.மு. 800- – கி.மு. 508) ஆசியா மைனர் பகுதியின் மேற்கில், கிரேக்கக் காலனிகள் உருவாயின. மக்கள்தொகை அதிகரிக்கவே, அருகில் உள்ள நிலப்பரப்புகளுக்கு இடம்பெயர்ந்து, நகரங்களை உருவாக்கி வாழத் தொடங்கினர். வெவ்வேறு பகுதிகளிலும் கலாசாரங்கள் செறிவுற்று, பல்வேறு நகரம் சார்ந்த அரசியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டன. ஹோமரின் இதிகாச இலக்கியங்கள் படைக்கப்பட்டது எல்லாம் ஆர்காய்க் காலத்தில்தான். கி.மு. 490 – 480க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பாரசீக மன்னர...