பெட்ரோல் தேசம்!
* உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு செளதி அரேபியா.

* இஸ்லாமிய மதம் மற்றும் அதன் புனிதத் தலங்களான மெக்கா, மதீனா ஆகியவற்றுக்காகவும் புகழ்பெற்றது.
* செளதி அரசர், ‘இரண்டு புனித பள்ளிகள் பாதுகாவலர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
* செளதி அரேபியாவின் எல்லைப்புறங்களாக, ஜோர்டான், ஈராக், குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஏமன் போன்ற நாடுகள் உள்ளன.
* 1400 ஆண்டுகளுக்கு முன் வரை, செளதி ஒரே நாடாக இருக்கவில்லை.
* 7ம் நூற்றாண்டில் மக்காவில் பிறந்த முகம்மது நபி, அரேபிய தீபகற்பத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஆட்சி அமைத்தார்.
* 1517ம் ஆண்டில், ஒட்டோமான் பேரரசு, செளதி அரேபியாவை தமது ஆட்சியின் கீழ் இணைத்தது.
* 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்னு சவூத் என்பவர், மதச் சீர்திருத்தவாதியான இப்னு வஹாப் என்பவருடன் கூட்டணி அமைத்தார். 1744ல், ரியாத் நகரை கைப்பற்றிய சவூத், அங்கு ஆட்சி அமைத்தார். இதுவே, முதல் செளதி தேசம் என்று அழைக்கப்படுகிறது.
* சவூத்தின் மறைவைத் தொடர்ந்து, அவருடைய பிள்ளைகள் ஆட்சிப் பொறுப்பேற்று, ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக போரிட்டு வந்தனர்.
* முதலாம் உலகப்போரில், ஒட்டோமான் பேரரசு தோற்கடிக்கப்பட்ட பின், செளதி அரேபியா தனி நாடாக ஆக்கப்பட்டது.
* 1938-ல், நாட்டுக்கு வளத்தை அள்ளிக்கொடுக்கும் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இது நாட்டின் தலையெழுத்தையே அடியோடு மாற்றியது.
* உலகின் 14வது பெரிய நாடான செளதி அரேபியாவில், 28 லட்சம் இந்தியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். செளதி அரேபியா சில தகவல்கள்
• அல் மம்லக்கா அல் அரேபியா அஸ் செளதியா என்பதே செளதி அரேபியாவின் முழுப்பெயர்
• இந்நாட்டில் பெண்கள் கார் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
• செளதியின் தலைநகர் ரியாத்
• தேசிய விளையாட்டு கால்பந்து
• தேசிய விலங்கு பாலைவனக் கப்பலான ஒட்டகம்
• உலகின் 18 சதவிகிதம் பெட்ரோல் வளம் உள்ள நாடு
• மொத்த தேசிய வளத்தில் 50 சதவிகிதம் பெட்ரோலும், எரிவாயுவும்தான்
• நதிகளோ, ஏரியோ இல்லாத ஒரே பெரிய நாடு
– மு.கோபி
Comments
Post a Comment