மனித உரிமையை உரக்க ஒலித்த பிரஞ்சுப் புரட்சி
மக்களுக்கு எதிரான அநியாயங்கள் அதிகரிக்கும்போது, அவர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகின்றனர். ஒரு கட்டத்தில், மக்கள் திடீரென ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவே, புரட்சியாக உருவெடுக்கிறது. சுருக்கமாகக் கூறினால், அரசியல், பொருளாதார, சமூகத் துறைகளில் ஏற்படும் திடீர் திருப்பமே புரட்சி. மனிதகுல வரலாற்றில், ஏராளமான புரட்சிகள் வெடித்திருக்கின்றன. நவீனகால வரலாற்றை பொறுத்தமட்டில், பிரஞ்சுப் புரட்சி முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிரஞ்சுப் புரட்சி - 1789
‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்கிற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்த, மாபெரும் மாற்றமே பிரஞ்சுப் புரட்சி.
பிரான்சில் அப்போதைய சமூகத்தை மூன்றாகப் பிரித்து பார்க்கலாம்.
1.மன்னர் சார்ந்த ஆட்சியாளர்கள்
2.மதகுருமார்கள், பிரபுக்கள்
3.விவசாயிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், சாதாரண மக்கள்
முதல் இரு பிரிவினரும், உயர்குடி மக்கள் என்று அழைக்கப்பட்டனர். மூன்றாம் பிரிவினர், உரிமையற்ற வர்க்கத்தினர் என்று அழைக்கப்பட்டனர். இந்த பிரிவுகள், பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் அப்போது, பொருளாதார நெருக்கடி நிலவியது. இதை சமாளிக்க, வரி மேல் வரி விதிக்கப்பட்டது. இதில், மூன்றாவது பிரிவினரே கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்சியாளர்கள் அலட்சியமும் அவர்களை பாதித்தது.
மதகுருக்கள், நிலபிரபுக்கள் ஆகியோருக்கு, வரி விதிக்கப்படவில்லை. அவர்கள், ஆடம்பர வாழ்வை விட்டுத்தர தயாராக இல்லை. மதகுருமார்கள் மற்றும் பிரபுக்கள் இடையே, கருத்து வேறுபாடு, பரஸ்பர வெறுப்பு நிலவியது. அவர்களிடையே ஒற்றுமையில்லை; படித்த நடுத்தர வர்க்க மக்கள், கடும் அதிருப்தியில் இருந்தனர்; தங்கள் கோபத்தை வெளிக்காட்ட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர்.
கோபத்தில் இருந்தவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக, சிந்தனையாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மக்களைப் புரட்சிக்கான வழிமுறைகளுக்கு துாண்டினர். இதில் ரூஸோ, மான்டஸ்கியூ, வோல்டயர் போன்ற அறிஞர்களது கருத்துகள் முக்கியமானவை.
புரட்சியின் மையமாக இருந்த பாரிஸ் நகரத்தில், மக்கள் கூடி கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு குழுவினரும், தமக்கெனப் பத்திரிகை நடத்தி, கருத்துகளை பரப்பினர்.
புரட்சியாளர்கள் ஒருங்கிணைந்து, கொடுங்கோன்மையின் சின்னமாக விளங்கிய பாஸ்டில் கோட்டையை, 1789 ஜூலை 14ம் தேதி, முற்றுகையிட்டு தாக்கினர். மதகுருமார்களும், பிரபுக்களும் விரட்டியடிக்கப்பட்டனர். இதுவே, பிரஞ்சுப் புரட்சியில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
புரட்சியின் விளைவுகள்:
* ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகள் வளர்ந்தன.
* மனித உரிமைகள் சாசனம் உருவாக்கப்பட்டது.
* சமூக ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு, தேசிய உணர்வு தூண்டப்பட்டது.
* சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகள் நிலைநாட்டப்பட்டன.
* ஜெர்மனிய ஐக்கியம், இத்தாலிய ஐக்கியம், தென் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு, வழிகாட்டியாக அமைந்தது.
* ஐரோப்பிய நாடுகளில் முடியாட்சி, பிரபுத்துவமுறைக்கு, முற்றுப்புள்ளி வைக்க உதவியது.
* ஜனநாயக தத்துவம் உலகுக்கு உணர்த்தப்பட்டது.

‘நூறு எலிகளால் ஆளப்படுவதைவிட, ஒரு சிங்கத்தால் ஆளப்படுவது மேல்'
Comments
Post a Comment