சுதந்திரப் புலி பூலித்தேவன்



`வெள்ளையனே வெளியேறு’ என்று, முதன் முதலாக வீர முழக்கமிட்டவர் பூலித்தேவன். இவரது இயற்பெயர் காத்தப்பதுரை. திருநெல்வேலி மாவட்டம், ஆவுடையார்புரம் என்கிற நெற்கட்டும் செவ்வல் பாளையமே இவரது ஊர். சிறுவயதிலேயே சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், வாள்யுத்தம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றார். பின்னர், நெற்கட்டு செவ்வல் பாளையத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அப்போது, இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி, வேர் ஊன்ற ஆரம்பித்திருந்தது.

அந்த சமயத்தில், மதுரையை ஆண்டு வந்த ஆற்காட்டு நவாப், ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன்பட்டிருந்தார். இதனால், ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை போன்ற பகுதிகளில், ஆட்சிப்பொறுப்பில் இருந்த பாளையக்காரர்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் பொறுப்பை, ஆங்கிலேயர்களுக்கு நவாப் அளித்தார்.

அந்த வகையில், பூலித்தேவனிடம் ஆங்கிலேயர் வரி கேட்டபோது, ‘ஒரு நெல்மணியைக் கூட வரியாக செலுத்த முடியாது; முடிந்ததைப் பார்’ என்று வரி கட்ட மறுத்தார்.

அதோடு, படை பலத்தை அதிகரிக்கும் வகையில், பூலித்தேவன், ஆங்கிலேயர்களுக்கு எதிராக கூட்டணி அமைக்க முயன்றார். இதனால், கோபமடைந்த ஆங்கிலேயர்கள், அண்டை நாட்டு மன்னர்களை பூலித்தேவனுக்கு எதிராக தூண்டிவிட்டனர். இதைத் தொடர்ந்து, நடந்த இரண்டு பெரும் போர்களில், பூலித்தேவன் வெற்றி பெற்றார்.

இதனால் அச்சமடைந்த ஆங்கிலேயர்கள், தஞ்சாவூர்,- புதுக்கோட்டை அரசர்களின் படையையும், யூசுஃப்கானின் (மருதநாயகம் பிள்ளை) படையையும், பூலித்தேவனுக்கு எதிராக ஏவிவிட்டனர். 1761-ம் ஆண்டு மார்ச் 21 முதல் மே 16 வரை போர் நீடித்தது. இறுதியில், பூலித்தேவனின் நெற்கட்டும் செவ்வல், வாசுதேவநல்லூர், பனையூர் போன்றவை, யூசுஃப்கானால் கைப்பற்றப்பட்டன.

பின்னர், ஆங்கிலேயர்கள் பூலித்தேவனை கைது செய்தனர். அதற்கு பிறகு, பூலித்தேவன் தப்பிச் சென்றதாக ஒரு தகவலும், அவரை ரகசியமாக கொன்றுவிட்டதாக வேறொரு தகவலும் கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்