3300 ஆண்டுகளுக்கு அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மன்னர்

வம்புக்கு சண்டைக்கு போக மாட்டேன். வந்த சண்டையை விட மாட்டேன் என்ற ரகம்தான், எகிப்து நாட்டைச் சேர்ந்த பண்டைய எகிப்து மன்னர், இரண்டாம் ராம்சஸ். கி.மு. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், எகிப்தை 67 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். பரோவா மன்னர்களில், சிறந்த ஆட்சியாளராக அறியப்படும் இவருடைய ஆட்சிகாலத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது. ஆம், உலகின் முக்கிய அமைதி உடன்படிக்கையாக கருதப்படும் காடேஷ அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஹிட்டீஸ் அரச வம்சம், எகிப்தின் பரோவா ராஜ்ஜியத்திற்கு சமமான பலம் கொண்டிருந்தது. சிரியா தேசத்தை யார் ஆள்வதில் என்பதில், இருவருக்கும் இடையே போட்டி. இதன் காரணமாக, இருதரப்புக்கும் 80 ஆண்டுகள் இடைவிடாத போர். இதனிடையே, ஹிட்டீஸ் கட்டுப்பாட்டில் இருந்த காடேஷ் என்ற பகுதியை ராம்சஸ் இரண்டாம் மன்னர் கைப்பற்ற நினைத்தார். இருதரப்புக்கும் கடுமையான போர். யாரும் வெற்றி பெறவில்லை. என்றாலும், இரண்டு தரப்பினருக்கும் சேதமோ கடுமையாக இருந்தது.
இதையடுத்து, சமாதானத்திற்கான முயற்சிகள் முன்வைக்கப்பட்டன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த அமைதி உடன்படிக்கை கி.மு. 1276ல் கையெழுத்தானது. அதில், காடேஷ் பகுதி பிரச்னை மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள பழைய விவகாரங்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வது என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இருநாட்டுக்கும் இடையே இருந்த வணிகத் தடைகளையும் களைந்து, வர்த்தக ஒத்துழைப்பு தருவது என்றும் முடிவானது. ஐக்கிய நாடு சபையின் நியூயார்க் நகர அலுவலகத்தில், இந்த அமைதி ஒப்பந்தத்தின் செம்புப் பலகை பிரதியை பார்க்க முடியும்.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்