பாஸ்போர்ட் தேவையில்லாத ராணி
சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியத்துக்கு
சொந்தக்காரர்கள் என்று பிரிட்டன் பேரரசு
சொல்லப்பட்டது. இவர்களின் ராஜ்ஜியத்தின் ஏதாவது
ஒரு பகுதியில் சூரியன் உதித்துக்கொண்டிருப்பதை
அப்படிப் பெருமையாகப் பறைசாற்றிக்கொண்டு
இருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில், உலகின்
பெரும்பகுதி ஆங்கிலேயர்களின் கையில் இருந்தது.
இன்று அதன் எல்லை சுருங்கிவிட்டாலும், உலகில்
ஒரு நாட்டை நீண்டகாலம் ஆளும் பெருமை, ராணி
இரண்டாம் எலிசபெத்துக்கு உண்டு. மன்னர் ஆறாம்
ஜார்ஜின் மறைவையடுத்து, 1953-ம் ஆண்டில்
இரண்டாம் எலிசபெத் பதவிக்கு வந்தார்.
பிரிட்டன் வரலாற்றிலேயே தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்பட்ட முதல் முடிசூட்டு விழா, ராணி
எலிசபெத்தின் விழாதான். முதலாம் எலிசபெத்தின்
மறைவுக்குப்பிறகு, `இரண்டாம் எலிசபெத்' என இவர்
அழைக்கப்பட்டார். ஐந்தாம் ஜார்ஜின் மகன் இளவரசர்
ஆல்பர்ட் எலிசபெத் – பௌவ்ஸ் நியோன் தம்பதிக்கு,
1921-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி பிறந்தார் எலிசபெத்.
இவரது இயற்பெயர், எலிசபெத் அலெக்ஸாண்ட்ரியா
மேரி. குழந்தைப் பருவத்தில் இவரின் செல்லப் பெயர்,
`லில்லிபெட்'. இவரும் அவரது தங்கை இளவரசி
மார்க்கரெட்டும் அரண்மனையிலேயே கல்வி கற்றனர்.
தங்கை மீது ராணிக்கு அதிக பாசம். மார்க்கரெட்
வசிக்கும் கென்னிங்டன் அரண்மனையிலிருந்து
பக்கிங்ஹாம் அரண்மனையில் வசிக்கும்
எலிசபெத்திடம் தொலைபேசியில் பேசுவதற்கு
அப்போதே வசதி உண்டு.
ராணி எலிசபெத் பத்தாவது வயதிலேயே
குதிரையேற்றம் கற்றுக்கொண்டவர். இளவரசர் பிலிப்
மெளன்ட்பேட்டனை, 1947-ம் ஆண்டு நவம்பர் 20- ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ராணிக்கு,
இளவரசர் பிலிப்பை 13 வயதிலிருந்தே தெரியும்.
கணவரது பெயரை, தன் பெயருடன் ராணி எலிசபெத்
இணைத்துக் கொள்ளவில்லை. 1948-ம் ஆண்டு நவம்பர்
14-ம் தேதி, தற்போதைய பட்டத்து இளவரசரான
சார்லஸ் பிறந்தார். அடுத்து, ஆனி பிறந்தார். 1952-ம்
ஆண்டிலிருந்து இதுவரை 4,04,500 விருதுகளைப்
பெற்றிருக்கிறார்.
ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட பெருமைகள்:
l ராணி, அந்நாட்டின் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்.
அவர் மீது எக்காரணம் கொண்டும்
தண்டிக்கவோ, சட்ட நடவடிக்கை மேற் கொள்ளவோ
முடியாது.
l பிரிட்டன் பிரதமர் மக்களால்
தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற
நிலையே தற்போது உள்ளது.
ஆனால், ராணி
நினைத்தால் நாடாளுமன்றத்
தைக் கலைத்து விட்டு,
யாரை வேண்டுமா
னாலும் பிரதமராக
நியமிக்க முடியும்.
l அதேபோல்,
தன்னிச்சையாக
போர் முடிவை
அறிவிக்கும்
அதிகாரமும் அவருக்
குண்டு. பிரான்ஸ்
மீது அணுகுண்டு
போடப்போகிறேன் என்று ராணி
சொன்னால், அதை பிரிட்டன் பிரதமரால் கூடத்
தடுக்க முடியாது.
l இந்திய கடற்படைக் கப்பல்கள் `ஐ.என்.எஸ்' (INDIAN
NAVAL SHIP) என அழைக்கப்படுவதுபோல்,
பிரிட்டன் கடற்படைக் கப்பல்கள் ராணியைக்
கௌரவப்படுத்தும் வகையில் `ஹெச்.எம்.எஸ்'
(HER MAJESTY'S SHIP) என்ற பெயருடன் அழைக்கப்
படுகின்றன.
l பிரிட்டனில் நம்பர் பிளேட் இல்லாமலும், டிரைவிங்
லைசென்ஸ் இல்லாமலும் கார் ஓட்ட அதிகாரம்
படைத்த ஒரே ஒருவர் ராணிதான்.
l உலகில் 600-க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளுக்கு
நிதியுதவி வழங்கி வருகிறார்.
l ராணி எலிசபெத்துக்கு, உலகம் முழுக்க 23 மெழுகுச்
சிலைகள் உள்ளன. இவருக்கென தனி ஃபேஸ்புக்
பக்கம் உள்ளது. ஆனால், உள்ளே எவரும் கமென்ட்
செய்ய முடியாது. ராணியை எவரும் விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த
ஏற்பாடு.
l இவர் எந்த நாட்டுக்குச் செல்லவும்
பாஸ்போர்ட் தேவையில்லை. உலகிலேயே
அதிக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த
உலகத் தலைவர் இவர்தான்.
l ராணி எலிசபெத்தும் அவரது குடும்பமும்தான்
தொலைக்காட்சி டாக்குமென்டரியில் நடித்த முதல்
பிரிட்டன் அரச குடும்பம்.
l நகைச்சுவை உணர்வுமிக்க ராணி,
இளவரசர் சார்லஸ், இளவரசி மார்க்
கரெட் போன்றோரிடம் ஜோக்குகள்
சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார்.
– மு.கோபி
Comments
Post a Comment