உலகின் முதல் ஷாப்பிங் மால்

இன்றைய நகரவாழ் மக்கள் பலருக்கும் முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்று, ஷாப்பிங் மால். எந்த வகையானப் பொருட்கள் என்றாலும், வணிக மால்களில் வாங்கிக்கொள்ளலாம். உடை, காலணி, ருசியான உணவு எல்லோமே ஒரே கூரையின் கீழ். ஆனால், இந்த வணிக மால் யோசனை இப்போது உருவாக்கப்பட்டதல்ல. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரோம் நகரில், நான்கு மாடிகள் கொண்ட வணிக மால் கட்டப்பட்டுவிட்டது. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?
பண்டைய ரோம் பேரரசர் ட்ராஜன் (Trajan) ஆட்சிக் காலத்தில் தான் (கி.பி. 98- 117) தான், இந்த பிரம்மாண்ட ஷாப்பிங் மால் கட்டப்பட்டது. இவரால் உருவாக்கப்பட்ட மாலில், விதவிதமான கடைகள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் இயங்கின. சிரியா நாட்டில் உள்ள டமாஸ்கஸ் நகரைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் அப்போலோடோரஸ் (Apollodorus), இந்த ஷாப்பிங் மாலை வடிவமைத்து உருவாக்கியவர். அதற்கு முன்னர், வேறு யாரும் இப்படி ஒரு ஷாப்பிங் மாலை கட்டியிருக்காத நிலையில், இது புத்தம்புது முயற்சியாக அமைந்தது.
இந்த ஷாப்பிங் மாலில் மொத்தம் எத்தனை அறைகள் இருந்தது தெரியுமா? 150 அறைகள் இருந்தன. மொத்தம் நான்கு தளங்கள். ஒவ்வொரு அறைகளும் அளவில் வெவ்வேறாய் இருந்தன. கடைகளுக்கு உள்ளே நுழைந்து வாடிக்கையாளர் பொருட்கள் வாங்க முடியாது. விற்பனையாளரிடம் சொன்னால், அவர் உள்ளே சென்று பொருட்களை எடுத்துக்கொடுப்பார். ஷாப்பிங் மாலில் நுழைவு வளாகத்திலிருந்து, வளைய வடிவில் ஒவ்வொரு தளங்களின் கடைகளையும் வரிசையாக பார்க்க முடியும். இப்போதும் இந்த வசதியை நவீன ஷாப்பிங் மால்களில் நீங்கள் பார்க்கலாம். தளங்கள் பளிங்குத்தரைகளாக அமைக்கப்பட்டிருந்தன.
உலகப்புகழ்புற்ற விளையாட்டு அரங்கமான ரோம் கொலோசியம் (Colosseum) எதிரேதான், இந்த ஷாப்பிங் மாலும் இருக்கிறது. கிட்டதட்ட 2000 வருடங்களுக்கு பின்னரும், மன்னரின் பெயர் சொல்லும் வகையில் டிராஜன் ஷாப்பிங் மாலின் சிதிலங்கள் காட்சி தருகின்றன. அதைப் பார்போர் அதன் பிரம்மாண்டத்திலும், வடிவமைப்பிலும் சொக்கிப் போகின்றனர்.


சிவசக்தி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்