சிறையில் பிறந்த பயண நூல்



மார்கோ போலோ எழுதிவைத்த உலகப் புகழ்பெற்ற பயண நூல் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த நூல் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, எழுதப்பட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

மார்கோ போலோ இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தைச் சேர்ந்த வணிகர். 1271ல் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த இவர், 1293ல் சொந்த ஊருக்குத் திரும்பினார். 1296ல், அவருடைய நகரான வெனிசுக்கும், ஜெனோவா நகருக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் மார்கோ போலோவும் கலந்துகொண்டார்.

சிறிய படைக்குத் தலைமை வகித்தவர், ஜெனோவாவுடன் போர் செய்தார். அப்போது, எதிரிப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். சிறையில், ருஸ்டிசெல்லோ என்ற கதாசிரியரும் இருந்தார். அவரிடம் மார்கோ போலோ, தாம் பார்த்து அனுபவித்தவற்றைச் சொல்ல, ருஸ்டிசெல்லோ மிகவும் உற்சாகமடைந்தார். குறிப்பாக, சீனாவிலிருந்து வெனிஸ் திரும்பி வரும்போது, அவர் கடற்கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டது, அங்கிருந்து தப்பித்து தமிழகம், இலங்கை சென்றது, அங்கு காணப்பட்ட செல்வக் குவியல்கள் போன்ற விறுவிறுப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து, இந்தக் கதைகளைப் பயண நூலாக மாற்றினார் ருஸ்டிசெல்லோ. ஆசிய நாடுகள், நகரங்கள் பற்றி ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ள உதவிய இந்நூல், இன்றுவரை பலராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. புகழ்பெற்ற கடற்பயணியான கொலம்பஸ்கூட இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்தார்.

↔– சிவசக்தி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்