அம்போடும் வில்லோடும் விளையாடிய ஜாக் மேட்



அம்பும் வில்லும் வைத்து நூறாண்டுகளுக்கு முன் சண்டையிட்டிருந்தால் அது  வீரமாகப் பார்க்கப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில், வில்லோடும் அம்போடும் ஒருவர்  யுத்தக்களத்திற்குச் சென்றால், அவரை உலகம் ஒருமாதிரியாகத்தான் பார்க்கும். காரணம், டாங்கிகளும், பீரங்கிகளும் உள்ள காலமிது. ஆனால், இரண்டாம் உலக யுத்த காலத்தில், அம்போடும் வில்லோடும் போர் புரிந்த ஒருவர் நிஜத்திலேயே இருந்திருக்கிறார். அவர்தான், இங்கிலாந்தைச் சேர்ந்த மேட்  ஜாக் (Mad Jack). இவரது இயற்பெயர் ஜான் ஃபிளமிங் சர்ச்சில். ஆக்ஸ்ஃபோர்டுஷைர் மாகாணத்தைச் சேர்ந்த இவர், 1926ல் இங்கிலாந்தின் ராயல் மிலிட்டரி அகாடமி என்ற

ராணுவக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். அவரது காலத்தில், அணுகுண்டு வரை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஏனோ அவருக்கு மட்டும் கடைசிவரை வாள், அம்பு, வில் போன்ற பழங்கால ஆயுதங்கள் மீது மோகம் குறையாமல் இருந்தது. சில காலம் பத்திரிகை ஆசிரியராகவும், பாக்தாத் திருடன் (Thief of Bagdad) படத்தில்

சினிமா நடிகராகவும் பணியாற்றிய சர்ச்சில், மீண்டும் ராணுவத்திலேயே சேர்ந்தார். அது, இரண்டாம் உலக யுத்த காலம். 1940ல், காலாட்படையின் துணைத் தளபதியாக

இருந்த மேட் ஜாக், களத்திற்கு எப்போதும் கையில் வாளுடனேயே செல்வார். ‘கையில்

வாள் இல்லாமல் செல்லும் போர்வீரன், ஒழுங்காக உடை அணியாத அரைகுறை

வீரன்’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

ஒருமுறை துன்கிர்க் யுத்தத்தின்போது, இங்கிலாந்தின் கிராமத்தை,

ஜெர்மனியின் நாஜிப்படையினர் முற்றுகையிட்டனர். அப்போது தூரத்திலிருந்து

வந்த அம்பு, நாஜிப்படை வீரனின் நெஞ்சில் தைத்து அவனை வீழ்த்தியது.

அடுத்தடுத்து, நாஜி வீரர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு வீழ்ந்தனர். இங்கிலாந்து

படையினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்திய நிலையில், யார் அம்பைப்

பயன்படுத்தியிருப்பார் என்பதை யூகிப்பதில் நமக்கு கஷ்டம் இல்லை. ஆம், மேட்

ஜாக் தான் அந்த வினோதத்துக்குச் சொந்தக்காரர்.

இன்னொரு முறை, மேட் ஜாக்கின் படையினர், இத்தாலியில் அவர்களுக்குப் பழக்கமில்லாத ‘லைன் ஃபைட்டிங்’ என்ற சண்டை முறையில், யுத்தம் செய்யுமாறு

கட்டாயப்படுத்தப்பட்டனர். அவரது படையினர் பயந்து கிடக்க, ஜாக் மட்டும்

இருட்டுக்குள் இருந்து வாளை மேல்நோக்கி அங்குமிங்கும் வீசியபடி முன்னேறிச்

சென்றுகொண்டிருந்தார். ரணகளமான போர்க்களத்தில், வாள் மின்னுவதைக்

கண்ட ஜெர்மனி படையினர், ஏதோ அமானுஷ்ய சக்தி வந்துவிட்டதாக எண்ணி

சரணடைந்தனர். பிறகென்ன, எதிரிகள் 42 பேரை கைதிகளாகப் பிடித்துக்கொண்டுபோய்,

மேலதிகாரியிடம் நல்ல பெயர் வாங்கினார் மேட் ஜாக்.

1944ல் யூகோஸ்லாவியாவில் போர் செய்தபோது, ஜெர்மன் படையினரிடம் மேட்

ஜாக் மாட்டிக்கொண்டார். அவரது இயற்பெயரான ஃபிளமிங் சர்ச்சிலைப் பார்த்து,

அவரை வின்ஸ்டன் சர்ச்சிலின் சொந்தக்காரர் என்று ஜெர்மனியார்கள் கருதி, அதிக

கொடுமை செய்தனர். அங்கிருந்து தப்பிய அவர், மீண்டும் எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார்.

பின்னர் ஆஸ்திரியாவில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஒருவழியாக மறுபடியும் தப்பினார்.

ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேட் ஜாக், 1966ல் காலமானார்.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்