உலகம் கவனிக்காமல், ஏமனில் ஒரு பெருயுத்தம்!
சவூதி அரேபியாவின் தலைமையில் நடந்து வரும் இம்மோசமான யுத்தத்தின் விளைவாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 20 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். 2004ல் ஆரம்பித்த உள்நாட்டுக் கலகம், 2015ல் உள்நாட்டுப் போராக வெடித்தது. இக்கொடூர யுத்தம், ஒட்டுமொத்த நாட்டையும் அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது.
‘ஞானத்தின் இருப்பிடம்’ என்று அரேபியர்களால் பெருமையாகக் குறிப்பிடப்பட்ட நாடு ஏமன். உலகின் தொன்மையான நாகரிகப் பெருமையைக் கொண்ட ஏமன், வடக்கில் சவூதி அரேபியாவையும், கிழக்கில் ஓமானையும், வடமேற்கில் செங்கடலையும் எல்லைகளாக கொண்டது. மகிழ்ச்சிமிக்க அரபகம் என்று அடையாளப்படுத்தப்பட்ட இப்பிரதேசம், இன்று சின்னாபின்னாப்பட்டு கிடக்கிறது. 2015ல் தொடங்கிய அதிபர் ஹைதிக்கு எதிரான உள்நாட்டுப் போர், முடிவுறாக் கொடுங்கனவாய் நீண்டு கொண்டேப் போகிறது. ஹூத்தி கலவரக்காரர்களை ஒடுக்கப்போவதாக சொல்லி, அமெரிக்க ஆதரவு கொண்ட சவூதி தலைமையிலான சர்வதேசக் கூட்டுப் படைகள் இப்போரை இடைவிடாமல் நடத்தி வருகின்றன. ஆகாயத்திலிருந்து பொழியும் குண்டு மழை, குறைவதற்கான அறிகுறிகள் இதுவரைத் தென்படவில்லை. ஷியா- சன்னி பகையைப் பயன்படுத்தி, பயங்கரவாத இயக்கங்கள் வளர்ந்து, பிரச்னைகளை சிக்கலாக்கி வருகின்றன. இதுவரை, 10 ஆயிரம் உயிர்ப்பலிகள், பொருளாதார சீரழிவு, மக்கள் தொகையில் பாதிப்பேர் பட்டினி என்று மோசமான விளைவுகளை ஏமன் சந்தித்துக்கொண்டிருக்கிறது.
கடந்த 2014, செப்டம்பரில் ஏமன் நாட்டின் தலைநகர் சனாவை, ஹூத்தி கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றின. ‘ஹூத்தி சையதிகள்’ என்றழைக்கப்படும் இவர்கள், சையதி ஷியா மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள். சையதி பிரிவினர், வடக்கு ஏமனை 1918லிருந்து 1962 வரை ஆட்சி செய்தனர். ஏமன் அதிபரான அலி அப்துல்லா சாலே, 1978ல் சையதிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டினார். ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டாலும், அதற்கடுத்து அமைந்த அதிபர் சாலே தலைமையிலான அரசில், அதிகாரமிக்க பொறுப்புகளை வகித்து வந்தனர்.
இந்நிலையில், சையதி ஆதிக்கம் பெற்ற பகுதிகளில் சன்னி இஸ்லாமிய சிந்தாந்தத்தின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதற்கு எதிர்வினையாக, சையதி மறுமலர்ச்சி இயக்கமாக, ஹூத்தி தொடங்கப்பட்டது. 2004ல், ஹூசைன் அல் ஹூத்தி என்பவர் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. தற்போதைய தலைவராக, சையதி மதப்பிரிவு பிரச்சாரகரான மாலிக் அல் ஹூத்தி உள்ளார். ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், 2004லிருந்து 2010 வரை சிறிய அளவிலான ஆயுதப் போராட்டத்திலேயே ஈடுபட்டு வந்தனர். மேலும், பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் செல்வாக்கை தடுப்பதிலும் முக்கிய காரணமாய் விளங்கினர்.
இந்நிலையில், 2011ல் மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து ‘அரபு வசந்த’ போராட்டங்கள் ஆரம்பித்தன. அதில், ஏமன் நாட்டில், அதிபர் சாலேவுக்கு எதிராக நடந்த போராட்டங்களில், ஹூத்திக்களுக்கு முக்கியப் பங்குண்டு. போராட்டங்களின் விளைவாக, அதிபர் சாலேவின் பதவி விகினார். இதைத்தொடர்ந்து நடந்த தேசிய அளவிலான பேச்சுவார்த்தையில் ஹூத்திக்கள் பங்கேற்றனர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே அவர்கள் மீண்டும் ஆயுத போராட்டத்துக்குத் திரும்பினர்.
2014 செப்டம்பரில், தலைநகர் சனாவுக்குள் அதிரடியாய் புகுந்த ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசை கவிழ்ந்தனர். சில மாதங்களில், அவர்களது தாக்குதலை சமாளிக்க முடியாமல் நாட்டின் அதிபர் மன்சூர் ஹாதி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். தொலைக்காட்சியில் தோன்றிய ஹூத்தி இயக்கத் தலைவர் மாலிக், ‘சர்வாதிகார ஆட்சியாளர்களை மீண்டும் அனுமதிக்க முடியாது. ராணுவ கவன நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு, பொருளாதார சீர்த்திருத்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் ’ என்று தெரிவித்தார்.
எனினும், இந்த சம்பவங்களின் பின்னால், ஈரானின் கை உள்ளதாக சவூதி அரசு கூறியது. சன்னி-ஷியா பகைமையின் வழியாக இப்போரை சவூதி தலைமை நின்று நடத்திக்கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் 26, 2015ல், சவூதிப் படைகள், ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலைத் தொடங்கின. தற்போது, சவூதியுடன் ஒன்பது ஆப்ரிக்க மற்றும் அரபு நாடுகள் கூட்டணி சேர்ந்து ஏமனில் போர் செய்து வருகின்றன. ஹில்புல்லா இயக்கத்தைப் போன்று, ஹூத்தி கிளர்ச்சியாளர்களும் ஈரானின் கைப்பாவை என்று சவூதி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், ஹூத்தி அமைப்பினர், ஈரான் அரசோடு பலமான எந்த உறவையும் கொண்டிருக்கவில்லை. ஹூத்திகளின் தற்போதைய உண்மையான கூட்டணியே, அவர்களின் முன்னாள் எதிரியான அதிபர் சாலே தான். ஹூத்திகள் தைரியமான போர் வீரர்களாக இருந்தாலும், நிர்வாகத் திறனற்றவர்கள் என்பது முன்னாள் அதிபர் சாலேவின் மதிப்பீடு. ராணுவ ரீதியாக ஹூத்திகளின் கை ஓங்கியிருந்தாலும், நிர்வாக ரீதியாக சாலேவின் ஜி.பி.சி., கட்சியினர் சிறந்தவர்கள் என்பதால், நிர்வாக ரீதியாக அவர்களுக்கு உதவ முடியும். இதன் அடிப்படையில் ஒரு கூட்டணியை அமைத்து, ஹூத்திகள் மூலம், தன் எதிரிகளை பழிவாங்க முடியும் என்பது அவர் எண்ணம். மதச்சார்பற்றவரான சாலே, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஆறுமுறை மதவாத ஹூத்திகளுக்கு எதிரான போரை நடத்தியவர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
1978ல் இருந்து 33 வருடங்கள் ஏமனை ஆண்ட சாலே, ஏமன் அரசியலைக் கரைத்துக் குடித்தவர். மக்கள் புரட்சியால் அவர் தூக்கி எறியப்பட்டிருந்தாலும், ஏமனில் இன்றுவரை செல்வாக்குமிக்கவராக இருந்து வருகிறார். ஆனால், அவரைத் தொடர்ந்து அதிபராக பொறுப்பேற்ற ஹாதி அப்படியில்லை. பலவீனமான, திறனற்ற ஆட்சியாளர் என்பது அவர் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம். கட்சியினரிடமோ, ராணுவத்திடமோ அவருக்கு போதுமான ஆதரவு இல்லை.
இந்நிலையில், சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை, ஹாதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி, ஈரானை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். தன்னிடம் உள்ள விமானப்படையின் மூலம் இந்த போரை விரைவாக முடித்துவிடலாம் என்று சவூதியின் கணக்கு. ஆனால், அது தப்புக்கணக்காவிட்டது. சவூதியின் இந்த தவறான முடிவுக்கு பின்னணியில் இருப்பவர், சவூதி இளவரசரான முகம்மது பின் சல்மான். வெறும் 32 வயதான சல்மான், நம்பிக்கைக்குரிய அரசியல் சீர்திருத்தவாதியாக பார்க்கப்பட்டார். ஏமன் போர் அதன் ஒருபகுதியாகத்தான் பார்க்கப்பட்டது. வஹாபிய பிரச்சாரத்தின் செயல்வீரராக, மத அறிஞர்களிடம் அவரை நிலைநிறுத்திக்கொள்ள வாய்ப்பாகவும் கருதப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்ததற்கு மாற்றமாக, அமெரிக்காவின் வியட்நாம் போரைப் போல் மாறிவிட்டது. சவூதி இளவரசர், இஸ்ரேலுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் மார்ட்டின் இண்டிக்குக்கு எழுதிய கடிதத்தில், ‘இப்போரில் யார் வெல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இதை உடனே முடிக்க வேண்டும்’ என்று எழுதியுள்ளார். சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதல்கள் குறித்து விசாரித்த ஐ.நா., அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்புக்கு பொறுப்பற்ற இலக்குத் தேர்வே காரணம் என்று சாடியிருந்தது. அதில் சில தாக்குதல்கள் சர்வதேச போர்க்குற்றங்கள் அளவுக்கு மோசமானவை என்று தெரிவித்திருந்தது.
நில்லாது செல்லும் போர்
ஏமன் நாட்டுப் போர் காரணமாக, இதுவரை 31 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளளனர். அமெரிக்காவே இந்த போருக்கு தேவையான குண்டுகளை வழங்குகிறது என்றாலும், இந்த போர் தொடர்பான செய்திகள், ஆங்கிலத்தில் அரிதாகவே இருப்பதை தெளிவாக காணலாம். பத்திரிகையாளர்கள், போர் தொடர்பான செய்திகளை சேகரிக்க அனுமதிக்கப்படுவதில்லை. சமீபத்தில் கூட சானாவுக்கு செல்ல, சவூதிக் கூட்டுப்படையினர் பிபிசி தொலைக்காட்சிக்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
போர் தொடர்பான செய்திகள் இரண்டு விதங்களில் வரும்படி பார்த்துக்கொள்ளப்படுகிறது. ஒன்று, சவூதியின் நடவடிக்கைகளுக்கு ஒத்திசைவாக, விமர்சிக்காத வகையில் செய்திகள். இரண்டாவது, சவூதியின் நடவடிக்கைகளை பாராட்டுவது மட்டுமின்றி, விமர்சகர்கள் மீது எதிர்தாக்குதல் தொடுக்கும் செய்திகளை வெளியிடுவது. சமூக வலைத்தளங்களே ஏமன் போர் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முதன்மையாய் உதவுகிறது. இவ்வளவு போரிலும், இணையதள வசதி பாதிக்கப்படாததே இதற்கு காரணம். எனினும், போதுமான ஊடக கவனம் இல்லாததால், ஏமன் போர் கிட்டதட்ட மறக்கப்பட்ட போராக மாறிவிட்டது.
சனாவில், ஹூத்தி அரசின் உள்துறை அமைச்சரின் தந்தையின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதையறிந்த சவூதி அரேபிய அரசு அப்பகுதியில் விமான மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. 140 பேரை பலிகொண்ட இத்தாக்குதலகுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சவூதி விமானங்களுக்கு, ஆகாயத்தில் வைத்து, அமெரிக்க விமானங்கள் எரிபொருள் நிரப்பாவிட்டால் ஏமனில் தாக்குதல் நடத்த முடியாது. இதுபோன்று சவூதி அரேபியாவுக்கு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கும் தொழில்நுட்ப, தளவாட, ஆயுத மற்றும் உளவு வகையிலான ஆதரவை நிறுத்த வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டது. எனினும், 2017 மே மாதம், அதிபர் டொனால்ட் டிரம்ப், 28.3 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தில் சவூதியிடம் கையெழுத்திட்டார்.
மே 7ம் தேதி, சாடா நகரில் உள்ள மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை செய்த சவூதி கூட்டுப்படை, வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அதில், ஐ.நா., செயற்கோள் புகைப்படத்தின்படி, 1171 கட்டிடங்கள், தரைமட்டமாகியிருந்தன. கோதுமை, சர்க்கரை மற்றும் உப்பை ஏற்றிக்கொண்ட 350 டிரக்குகள் குறிவைத்து அழிக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட திராட்சை தோட்டங்கள், போகிற போக்கில் காலி செய்யப்பட்டன. சாடா, திராட்சைத் தோட்டங்களுக்கு புகழ் பெற்றவை. 99 சதவீத மக்கள், இங்கிருந்து இடம்பெயர்ந்துவிட்டனர்.
ஏமன் தேசத்தில் உள்ள மக்களிடம் பரவலாக ஆயுதங்கள் புழங்குகின்றன. இதற்கு, சவூதி அரசு, ஹூத்தி ஆயுதக்கிடங்குகள் மீது பொறுப்பற்ற முறையில் தாக்குதல் நடத்துவது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஹூத்திகளுக்கு எதிராக போராடும் எந்த குழுவாக இருந்தாலும் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் சவூதி முனைப்புக் காட்டி வருகிறது. இப்படியாக வளர்ந்து வரும் ஷியா எதிர்ப்பு உணர்வை நன்றாக பயன்படுத்தி, அல்கொய்தா பயங்கரவாதிகள் பொது மக்களிடையே கலந்து வருகின்றனர். மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா இடையேயான போட்டியும் நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது. 2017 ஐ.நா., அறிக்கையின்படி, ‘மாறிவரும் அரசியல் சூழ்நிலை மற்றும் நிர்வாக வெற்றிடத்தை, ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தங்களுக்கு சாதகமாக மாற்றும் வேலையில் தீவிரம் காட்டி வருகின்றனர். ’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய ஜலசந்தி, பால் அல் மாண்டேப். இது, ஐரோப்பா மற்றும் ஆசியா இடையேயான கடல்வழி வணிகத்துக்கு, முக்கியப் பாதையாக உள்ளது. மத்திய தரைக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலை இணைக்கும் இந்த ஜலசந்தி வழியாக, லட்சக்கணக்கான எண்ணெய் பேரல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. கடந்த அக்டோபர் 2016 தொடங்கி, இவ்வழியே சென்ற ஸ்பெயின், அமெரிக்க, யு.ஏ.இ. நாட்டு கப்பல்கள் அடுத்தடுத்து தாக்குதல்களுக்கு உள்ளாயின. இதையடுத்து, ஹூத்திப் படை தாக்குதல்களைத் தடுக்கப் போவதாக கூறி சர்வதேச கூட்டுக் கப்பல் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், துறைமுகங்களின் வழியே ஆயுதக்கடத்தல்களை தடுக்கப்போவதாக கூறி கெடுபிடிகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கப்பல்கள் நுழைய அனுமதி தருவதற்கு வாரக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. ஏமனின் 99 சதவீத உணவு, 8 சதவீத மருந்துகள் இறக்குமதியே செய்யப்படுகிறது. அடுத்து, ஹோடீடா துறைமுகத்தின் மீது சவூதி தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி செய்தால், ஏமன் முழுவதுமாக முற்றுகையிடப்பட்டு, மக்கள் வெளியேற இடமில்லாமல் ஆக்கப்படும்.

Comments
Post a Comment