காட்டுமிராண்டி வைக்கிங்குகள்
வைக்கிங்ஸ் (Vikings) இந்த பெயரைக் கேட்டாலே இன்றளவும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் மக்கள் அரண்டு போவார்கள். காரணம், வைக்கிங்குகளின் காட்டுமிராண்டித்தனமான அராஜகங்கள் அத்தகையது. கி.பி. 800களிலிருந்து, 11ம் நூற்றாண்டு, ஒரு கூட்டம் வடஜெர்மனியின் ஸ்காண்டிநேவியாவிலிருந்து செல்வங்களை தேடி புறப்பட்டனர். இவர்கள்தான் வரலாற்றில் ‘வைக்கிங்குகள்’ அல்லது நார்டிமென்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ‘வைக்கிங்குகள்’ என்றால் கடற்கொள்ளையர்கள் என்று பொருள். இவர்கள் மூன்று நூற்றாண்டுகள், ஐரோப்பாவின் பிரிட்டன், ஸ்காட்லாந்து மற்றும் பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி செல்வங்களை கொள்ளையடித்தனர்.வைக்கிங்குகளின் இந்த தாக்குதல் இரண்டு காரணங்களால் உந்தப்பட்டன. முதலாவது, வட ஐரோப்பாவில் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், 9 நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது. அங்கு சென்று தாக்குதல் நடத்திய சில வைக்கிங்குகள் செல்வ செழிப்புடன் இருப்பதைக் கண்டு, தாங்களும் இதுபோன்று ஆக வேண்டும் என்று மற்ற வைக்கிங்குகளுக்கும் ஆசை ஏற்பட்டது. இரண்டாவது, அவர்களின் கப்பல் கட்டும் தொழில்நுட்பம். வைக்கிங்...