சிங்கபுராவிலிருந்து சிங்கப்பூர் வரை
ஒரு பெரிய தீவு, 63 மிகச் சிறிய தீவுகள்... இதுதான் சிங்கப்பூர். மலாய் (மலேசியா) தீபகற்பத்தின் முனையில் அமைந்துள்ளது சிங்கப்பூர். சிங்கப்பூருக்கான பெயர்க் காரணத்தைச் சொல்லும், பிரபல நாடோடிக் கதை ஒன்று உண்டு. சுமத்ராவைச் சேர்ந்த (சுமத்ரா இப்போதைய இந்தோனேசியாவின் ஒரு பகுதி) இளவரசர் ஸ்ரீவிஜயன், 13ம் நூற்றாண்டில், ஒரு தீவில் காலடி வைத்தார். அங்கே அவர் முதலில் ஒரு சிங்கத்தைக் கண்டு, அதை மங்களமான குறியீடாகக் கருதி மகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து, சிங்கபுரா என்றும் அதற்குப் பெயரிட்ட அவர், அந்தத் தீவில் மக்களைக் குடியேற்றினார் என்று அந்தக் கதை சொல்கிறது. 11ம் நூற்றாண்டில், சோழச் சக்ரவர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன், ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை வெற்றிகண்டார். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர், சோழர்கள் வசம் வந்தது. 14ம் நூற்றாண்டில், சயாம் மற்றும் மஜாபாகித் பேரரசுகள் சிங்கப்பூரை அடைவதற்குக் கடும் முயற்சி செய்தன. இறுதியில், மஜாபாகித் பேரரசு வெற்றி கண்டு, சிங்கப்பூரைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்தது. பின்னர், சிங்கப்பூரை மலாகா (மலேசியா) சுல்தான் கைப்பற்றினார். இப்படிப் பலரிடம் கைமாறிய சிங்கப்பூர், 1511ல், போர்துக...