Posts

பூனை பாசத்தால் வந்த மோசம்

Image
பண்டைய எகிப்தியர்கள் பூனை மேல் கொள்ளைப் பிரியமாய் இருந்தார்கள் என்பது, நமக்குத் தெரிந்த விஷயம்தான். பலர், பூனையைக் கடவுளாகக்கூட பூஜித்தனர். ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது என்றால், தாங்கள் தப்பிப்பதைவிட, பூனைகளைத்தான் முதலில் காப்பாற்றுவார்கள். யாராவது பூனையைக் கொன்றுவிட்டால், அவர்களுக்கு மரண தண்டனைதான். யார் வீட்டிலாவது பூனை இறந்துபோனால், அந்தக் குடும்பத்தார் துக்கத்தை வெளிப்படுத்த புருவங்களை மழித்துக்கொள்வார்கள். அந்தளவுக்குப் பூனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், பூனை மேல் வைத்த பாசத்தால் அவர்கள் மோசம் போன கதை உங்களுக்குத் தெரியுமா? கி.மு. 525ல், எகிப்தில் உள்ள நைல் டெல்டா பகுதியான பெலுசியத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. கி.மு. 525ல் எகிப்தை ஆண்ட மூன்றாம் பரோவா மன்னனான அமாசிஸ்க்கும், அண்டை நாடான பாரசீகப் பேரரசுக்கும் கடும் பகை. இதனால், பாரசீகப் படை எகிப்தில் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம் என்ற சூழல். எகிப்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைக்குன்றுகள் மீது பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வில்வித்தையில் பலே கில்லாடிகள். கழுகுப் பார்வை...

ஆ, ஊன்னா கூட்டம் கூட்டமா கொடிய தூக்கிக்கிட்டு கிளம்பிடுறாங்க!

Image
மா ணவர்களே! உலகின் முதல் வேலைநிறுத்தம் எப்போது நடைபெற்றது தெரியுமா?. சொன்னால் நம்ப மாட்டீர்கள், கி.மு. 1170ம் ஆண்டில்தான் முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. எகிப்தில் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பான நிகழ்வுகள் வரிக்கு வரி, பாப்பிரஸ் (papyrus) தாளில் எழுதி ஆவணப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இந்த வேலை நிறுத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றிலிருந்து அப்படியே ஏறக்குறைய 3200 ஆண்டுகள் பின்னோக்கி போங்கள். அப்போது எகிப்து சாம்ராஜ்யத்தை, மூன்றாம் ராம்சஸ் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அந்த நாட்டு கலாசாரப்படி, ஒவ்வொரு மன்னனும், தான் வாழும்போதே தனக்கான கல்லறையை கலைநயத்துடன் பார்த்துப்பார்த்து பிரம்மாண்டமாக கட்டிக்கொள்வான். இன்று நாம் பார்க்கும் பிரமிடு எல்லாம் அதுபோன்ற கல்லறைகள்தான். இதேபோல், ராம்சஸ் மன்னரின் கல்லறையைக் கட்டமைக்க, நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களும், கைவினைக் கலைஞர்களும் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு ஊதியமாக, மாதத்திற்கு ஒருமுறை, தேவையான கோதுமை தானியங்களை மன்னர் வழங்க வேண்டும். என்ன போதாத காலமோ தெரியவில்லை, சரியான நே...

விமானத்திலிருந்து குண்டு வீசிய முதல் வீரன்

Image
காலந்தோறும் போர் செய்யும் முறைகள் மாறிக்கொண்டே வந்துள்ளன. கல்லை வைத்து, கவணை வைத்து, கத்தியை வைத்து, அம்பை வைத்து, துப்பாக்கியை வைத்து என்று மாற்றங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இந்த வகையில், விமானத்தில் இருந்து எதிரிகளின் மீது குண்டெறியும் முறையை அறிமுகப்படுத்திய ஓர் இளைஞனைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம். தற்போது, வெளிநாட்டுப் படையெடுப்பு மற்றும் உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள லிபியா நாட்டில்தான், அந்த துரதிருஷ்டவசமான சம்பவம் அரங்கேறியது. அது 1911ம் ஆண்டு. வட ஆப்பிரிக்க நாடான லிபியா, ஓட்டோமான் துருக்கியப் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்தது. அப்போது, லிபியாவை உரிமை கொண்டாடும் போட்டியில், துருக்கியப் பேரரசுக்கும், இத்தாலியப் படைகளுக்கும் சண்டை உக்கிரமாக நடந்தது. அப்போது, போர்க்களத்தில் விமானியாகப் பணியாற்றிய இத்தாலிய இளைஞன் கியூலியோ கவோட்டி, தன் தந்தைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான். ‘தந்தையே, நான் ஒரு புது முடிவை எடுத்துள்ளேன். இதுவரை ராட்சத பலூன்களில் இருந்து மட்டுமே குண்டுகளை எறிவது வழக்கம். இப்போது, நான் ஆகாய விமானத்திலிருந்து துருக்கியப் படைகள் மீது குண்டு...

இயற்கை எழில்மிகு இலங்கை தேசம்

Image
அழகும் வனப்பும்மிக்க தேசங்களில் ஒன்று இலங்கை. நாட்டின் தென்பகுதி பொன்னிற கடற்கரைகளையும், மத்திய பகுதி பசும் மலைகள், மழைக்காடுகளையும் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அழைக்கப்படும் இலங்கை, அதன் செழிப்பு, பன்முக கலாசாரம் ஆகியவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதன் சிறப்புமிக்க பூலோக ரீதியான அமைப்பால், பல நூற்றாண்டுகளாக வர்த்தகங்கள், பயணிகள் மத்தியில் பிரபலமாக விளங்கி வருகிறது. ராமாயணத்தில், ராவணனால் சீதை கடத்திச் செல்லப்படும் இடம் இலங்கைதான். சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும், தமிழர்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும், மூன்று முக்கிய இனக்குழு மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர். விஜயன் தொடங்கி வைத்த வரலாறு இலங்கையின் வரலாறு 2500 ஆண்டுகள் பழமையானது. இலங்கையில் முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய வரலாற்று நூலாக மகாவம்சம் கருதப்படுகிறது. அதன்படி, 2500 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவின் கலிங்க நாட்டில் இருந்து, அந்நாட்டு இளவரசனான விஜயன் துரத்திவிடப்பட்டான்; அங்கிருந்து கிளம்பி, தனது எழுநூறு தோழர்களுடன் விஜயன் இலங்கைக்கு வந்திறங்கினா...

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்

உலக வரலாற்றில், ஜரோப்பிய மறுமலர்ச்சி என்ற சம்பவம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 14, 15ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா கலாச்சாரத்தில் ஏற்பட்ட புதிய திருப்புமுனையே ஜரோப்பிய மறுமலர்ச்சி (Europe renaissance) எனப்படுகிறது. மறுமலர்ச்சி என்றால் 'மீண்டும் மலர்தல்' அல்லது 'புத்துயிர்ப்பு' என்று பொருள். கடந்த 1453ம் ஆண்டு, கிழக்கு ரோமப் பேரரசின் வர்த்தக மையமாக செயல்பட்ட கான்ஸ்டாட்டிநோப்பிள் துறைமுகத்தை ( Constantinople) ஒட்டோமன் துருக்கியர்கள் கைப்பற்றினர். இதுவே, ஜரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். இந்த படையெடுப்பால், கிழக்கு ரோமப் பேரரசில் வாழ்ந்த மக்கள், மேற்கு ரோம பேரரசிற்கு இடம் பெயர்ந்தனர். அப்படி செல்லும்போது, கான்ஸ்டாட்டிநோப்பிளில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பண்டைய நூல்களையும் கூடவே எடுத்து சென்றனர். அறிஞர்கள், அறிவுப் பொக்கிஷமாக இருந்த பலதுறை நூல்களை ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்தனர். பண்டைய இலக்கியங்களை கற்பதற்கு பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். இதனால், மேற்கு ரோம பேரரசில் புதிய கருத்துக்களின் தாக்கம் ஏற்பட்டது. இதன்விளைவாக, 14ம், 15ம் நூற...

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

கம்போடிய முடியரசு, ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். பழைய தமிழ் இலக்கியங்களில் கம்புஜம் அல்லது காம்புசம் என்று அழைக்கப்படும் இந்த நாடு, காலத்திற்கு காலம் பல பெயர்களைத் தாங்கி நிற்கிறது. 1970 மார்ச் மாதம், புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய அமெரிக்க ஆதரவாளர் ஜெனரல் லொன் நொல், இந்த நாட்டிற்கு வைத்த பெயர் கிமர் (KHMER). அதன்பின்னர், 1975ல் கம்போடியாவை ஆட்சி செய்த போல் பாட் (pol pot) சூட்டிய பெயர் கம்புஜியா. வியட்நாமியப் படையெடுப்பு மூலம் பொல் பொட் ஆட்சி முடிவுகட்ட பின், இந்நாட்டுக்கு வைக்கப்பட்ட பெயர் கம்போடியா. இந்தப் பெயரே இன்று வரை நிலைத்து நிற்கிறது. இந்நாட்டில் ஏறக்குறைய 1.5 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்நாட்டின் தலைநகர் “புலோம் பென்”.  இதுவே, இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை "கம்போடியர்" எனவும், ‘கிமர்’ (Khmer) எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர்கள், பெளத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கம்போடியாவின் எல்லைகளாக மேற்கிலும், வடமேற்கிலும் தாய்ல...

நேபாளத்தை கட்டி எழுப்பிய ஷா வம்சம்

பரந்துபட்ட இந்தியாவையே காலனி நாடாக்கி, 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது பிரிட்டன். ஆனால், நமக்குப் பக்கத்தில் உள்ள சிறிய நாடான நேபாளத்தை, பிரிட்டனால் கடைசி வரை அடிமைப்படுத்த முடியவில்லை. இதற்கு, மலைப்பாங்கான நேபாள பூகோள அமைப்பும், ஷா மன்னர்களும் முக்கிய காரணங்கள். வடக்கே சீனாவும், மற்ற மூன்று திசைகளிலும் இந்தியாவும் சூழ, இமயமலையில் அமைந்துள்ளது நேபாளம். நேபாளம், 16ம் நூற்றாண்டு வரை, மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்து கிடந்தது. நவீன நேபாளத்துக்கு அடித்தளமிட்டவர்கள், கோர்க்கா நாட்டை ஆண்ட ஷா வம்சத்து மன்னர்கள். ஷா வம்சத்து மன்னர்கள், நேபாளத்தை கி.பி-. 1559 முதல் 1846 வரை ஆட்சி செய்தனர். கி.பி. 1559-ம் ஆண்டு, திரவிய ஷா என்பவர், இன்றைய நேபாளத்தில் உள்ள சிறிய பகுதியான கோர்க்காவில், ஷா வம்சத்து ஆட்சியை நிறுவினார். கி.பி. 1736-ல் கோர்க்காவை ஆட்சி புரிந்த ஷா வம்சத்து மன்னரான நரபூபால ஷா, நாட்டை விரிவாக்க எண்ணி, அண்டை சிற்றரசுகள் மீது போர் தொடுத்தார். இந்த விரிவாக்க வேலைகளைப் பெருமளவில் நிறைவேற்றியவர், அவரது மகன் பிருத்வி நாராயணன் ஷா ஆவார். கி.பி. 1745-ல் நேவார் அரச குலத்தினர் ஆட்சி செய்து வந்த காத்மாண்டு...