பாஸ்போர்ட் தேவையில்லாத ராணி
சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியத்துக்கு சொந்தக்காரர்கள் என்று பிரிட்டன் பேரரசு சொல்லப்பட்டது. இவர்களின் ராஜ்ஜியத்தின் ஏதாவது ஒரு பகுதியில் சூரியன் உதித்துக்கொண்டிருப்பதை அப்படிப் பெருமையாகப் பறைசாற்றிக்கொண்டு இருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில், உலகின் பெரும்பகுதி ஆங்கிலேயர்களின் கையில் இருந்தது. இன்று அதன் எல்லை சுருங்கிவிட்டாலும், உலகில் ஒரு நாட்டை நீண்டகாலம் ஆளும் பெருமை, ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உண்டு. மன்னர் ஆறாம் ஜார்ஜின் மறைவையடுத்து, 1953-ம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் பதவிக்கு வந்தார். பிரிட்டன் வரலாற்றிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் முடிசூட்டு விழா, ராணி எலிசபெத்தின் விழாதான். முதலாம் எலிசபெத்தின் மறைவுக்குப்பிறகு, `இரண்டாம் எலிசபெத்' என இவர் அழைக்கப்பட்டார். ஐந்தாம் ஜார்ஜின் மகன் இளவரசர் ஆல்பர்ட் எலிசபெத் – பௌவ்ஸ் நியோன் தம்பதிக்கு, 1921-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி பிறந்தார் எலிசபெத். இவரது இயற்பெயர், எலிசபெத் அலெக்ஸாண்ட்ரியா மேரி. குழந்தைப் பருவத்தில் இவரின் செல்லப் பெயர், `லில்லிபெட்'. இவரும் அவரது தங்கை இளவரசி மார்க்கரெட்டும் அரண்மனையிலேயே கல்வி கற்ற...