பூனை பாசத்தால் வந்த மோசம்

பண்டைய எகிப்தியர்கள் பூனை மேல் கொள்ளைப் பிரியமாய் இருந்தார்கள் என்பது, நமக்குத் தெரிந்த விஷயம்தான். பலர், பூனையைக் கடவுளாகக்கூட பூஜித்தனர். ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது என்றால், தாங்கள் தப்பிப்பதைவிட, பூனைகளைத்தான் முதலில் காப்பாற்றுவார்கள். யாராவது பூனையைக் கொன்றுவிட்டால், அவர்களுக்கு மரண தண்டனைதான். யார் வீட்டிலாவது பூனை இறந்துபோனால், அந்தக் குடும்பத்தார் துக்கத்தை வெளிப்படுத்த புருவங்களை மழித்துக்கொள்வார்கள். அந்தளவுக்குப் பூனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், பூனை மேல் வைத்த பாசத்தால் அவர்கள் மோசம் போன கதை உங்களுக்குத் தெரியுமா? கி.மு. 525ல், எகிப்தில் உள்ள நைல் டெல்டா பகுதியான பெலுசியத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. கி.மு. 525ல் எகிப்தை ஆண்ட மூன்றாம் பரோவா மன்னனான அமாசிஸ்க்கும், அண்டை நாடான பாரசீகப் பேரரசுக்கும் கடும் பகை. இதனால், பாரசீகப் படை எகிப்தில் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம் என்ற சூழல். எகிப்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைக்குன்றுகள் மீது பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வில்வித்தையில் பலே கில்லாடிகள். கழுகுப் பார்வை...